நான் சிவப்பு மனிதன் உல்டாவா ரஜினியின் 'பேட்ட'?

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 01:44 pm

is-rajini-s-petta-similar-to-nan-sivappu-manithan

ரஜினிகாந்தின் அடுத்த படமான பேட்டதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்... இதுவரை பேட்ட தவிர்த்து டைட்டில் வைக்காமல் ரஜினியின் படங்களுக்கும் பூஜை போட்டதே இல்லை. பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் ரஜினியின் படப் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் முதல் படம், அனிருத் இசையில் ரஜினி நடிக்கும் முதல் படம் போன்ற சிறப்புகளும் இந்த படத்துக்கு உண்டு.

'பேட்ட' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்டிலும் நடந்து முடிந்துள்ளது. 3-வது கட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அங்குள்ள மலிகாபாத், சீதாபூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.

அரசியல் கட்சியின் பெயரை எந்த நேரத்திலும் ரஜினி வெளியிடலாம் என்பதால், ரஜினிக்கு இந்த முறை பாதுக்காப்பு பலமாகவே உள்ளது. சென்னையில் இருந்து அவர் லக்னோ சென்றபோது, விமானத்திலேயே அவருக்கு துணையாக சுமார் 40 பவுன்சர்களும் சென்றுள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் ரஜினிக்கு துணையாக அவர்கள் ஒரு மாதமும் இருப்பார்கள். இதற்கான செலவை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஏற்றுள்ளது. இது தவிர உ.பி. மாநில அரசு 25 கான்ஸ்டபிள்களை ரஜினியின் பாதுகாப்புக்கு பிரத்யேகமாக நியமித்துள்ளது.

படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை பார்த்தால் இதிலும் ரஜினி தாதா வேடத்தில் வருவது போல் உள்ளது.1980-களில் ரஜினி நடித்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நான் சிவப்பு மனிதன்' படத்தை தழுவி 'பேட்ட' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக வருவார். இரவில், தாதாவாக உருமாறி  சமூக விரோதிகளை வேட்டையாடுவார். இந்த படத்தில் ரஜினி கல்லூரி வார்டனாக நடித்து வருவதாகவும் இரவில் ‘டானா’க மாறி ‘பேட்ட’ ரவுடிகளை பதம் பார்ப்பதாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் உலா வருகிறது.

'படத்தின் கதை பற்றி மூச்சு விடக்கூடாது' என்று பட யூனிட்டில் உள்ள எல்லோருக்கும் சொல்லி விட்டதால் இதில் நடிக்கும்  விஜய் சேதுபதி, பாபிசின்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட யாரும் வாய் திறப்பதில்லை.

-பா.பாரதி

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.