அரை மணி நேரம் போனில் பாராட்டிய யுவன் : பியார் பிரேமா காதல் இயக்குநர் இளன் பேட்டி

  கனிமொழி   | Last Modified : 12 Sep, 2018 11:43 am

yuvan-congratulates-in-call-for-half-an-hour-ppk-director-elan-exclusive

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த படம் பியார் பிரேமா காதல். யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாகத் தயாரித்த இத்திரைபடத்தை இளம் இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இந்த தலைமுறைக்கு ஏற்ற லவ் ஸ்டோரியை அழகாய் டைரக்ட் செய்திருந்தார். 

இப்படம் ரிலீசாகி ஒன்றரை மாதம் ஆயிற்று. இன்னும் சில திரையரங்குகளில் பியார் பிரேமா காதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அதியசம் தான். அறிமுக இயக்குநர் புதுமுக நட்சத்திரங்களைக் கொண்டு இயக்கிய இந்த படம் இளைஞர்களால் மட்டுமின்றி எல்லா வயதினராலும் பாராட்டபட்டு வருகிறது. தன் முதல் படத்திலேயே எதிர்பாராத அளவு ஹிட் கொடுத்த இயக்குநர் இளனிடம் பேசினோம்.

முதல் படமே பியார் பிரேமா காதல் போன்ற கதை எப்படி தேர்ந்தேடுதீர்கள் ?

பியார் பிரேமா காதல் படத்தின் கதை டைரக்ட் பண்ண ரொம்ப சுலபம். ஒரு லவ் ஸ்டோரி பண்ணும்னு ரொம்ப நாள் ஆசை. கதைக்காக ரொம்ப எல்லாம் யோசிக்கவே இல்ல. ரொம்ப ஜாலியா டைரக்ட் பண்ண ஒரு படம் தான் பியார் பிரேமா காதல். இந்த காலத்து இளைஞர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்பினோம் அதே மாதிரி எதிர்பார்த்த ஹிட்டும் கொடுத்திருக்கிறது இந்த படம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பில் எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்?

3 வருஷம் முன்னாடி நான் ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணியிருந்தேன். அதை யுவன் பார்த்திருக்காரு. ஒரு லவ் ஆல்பம் போல ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று யுவன் தேடிட்டு இருந்தப்போ எனக்கு தெரிந்த சில நபர்கள் என்னை பற்றி யுவனிடம் சொல்ல, அவரே என்ன வர சொல்லி கதை கேட்டாரு. அப்படி ஆரம்பித்தது தான் பியார் பிரேமா காதல்.   

பிக் பாஸ் போட்டியாளர்களை ஹீரோ ஹீரோயினாக தேர்ந்துடுக்க காரணம் என்ன ?

இந்த படம் கதை எழுதும் போதே நான் முடிவு செய்தது இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் தான் நடிக்கணும்னு. இந்த தலைமுறையினருக்கு ஏற்ற கதை என்பதால் ஹீரோ ஹீரோயின் புதுசாக இருக்கனும் என்று எதிர்பார்த்தேன். அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரைசா, ஹரிஷ் ட்ரெண்டில் இருந்தாங்க. நானும் படக்குழுவும் சேர்ந்து ஆலோசித்து ரைசா, ஹரிஷ்யையே தேர்ந்தெடுத்தோம். பிறகு இதுவே எங்கள் படத்திற்கு பெரிய ப்ளஸ் ஆக அமைந்துவிட்டது.

சினிமாவில் இயக்குநராக உங்கள் பயணத்தை ஆரம்பித்தது எப்படி ?

நான் ஒரு இஞ்சினீயரிங் மாணவன். எனக்கு குறும்படங்கள் இயக்க ரொம்ப பிடிக்கும். காலேஜில் படிக்கும் போதே குறும்படங்கள் இயக்க ஆரம்பித்தேன். அதுக்கு பிறகு கதை எழுதுவது போன்ற வேலைகளில் முழு நேரம் ஈடுபட்டு என் முதல் படம் கிரகணம் டைரக்ட் பண்ணேன். கழுகு படத்தின் நாயகன் கிருஷ்ணா தான் கிரகணம் படத்தின் ஹீரோ. இப்படத்தின் வேலைகள் எல்லாம் பியார் பிரேமா காதல் படத்திற்கு முன்னாடியே முடிந்து விட்டது. படத்தின் தயாரிப்பாளர் பிரச்னையில் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கு.

பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு உங்களுக்கு கிடைத்த சிறந்த பாராட்டு ?

படத்தை பார்த்து யுவன் எனக்கு கால் செய்து அரை மணி நேரம் பேசினார். பொதுவாகவே அவர் ரொம்ப பேசாத ஒரு மனிதர். அவர் பாராட்டியதை தவிர்த்து அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்து விட்டோம். இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பாராட்டு என்று சொல்லுவேன். 

இந்த படத்தில் வருவது போல உங்கள் வாழ்கையில் ஏதேனும் லவ் இருந்ததா?

எனக்கு ஓன் சைட் லவ் ஒன்று இருந்துச்சு. அதை வைத்தும் என் நண்பர்களின் காதல் கதைகளை வைத்தும் உருவான கதை தான் பியார் பிரேமா காதல். எல்லோர் வாழ்கையிலும்  கண்டிப்பாக ஒரு காதல் கதை இருக்கும். அதை தான்  நான் என் படத்திலும் கூறியுள்ளேன். இயல்பான முறையில் கூறியதால் தான் இந்த அளவிற்கு ஹிட் அடிக்க முடிந்தது என்று நம்புகிறேன். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.