36வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயா சரண்

  கனிமொழி   | Last Modified : 11 Sep, 2018 05:36 pm
shriya-saran-celebrates-36th-birthday

கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகில் ஒரு நடிகை சுமார் 18 ஆண்டுகள் தாக்கு பிடிக்க முடிகிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரை தொடர்ந்து அதே போல சினிமாவில் நீண்ட காலம் நீடித்து இருப்பவர் ஸ்ரேயா சரண். 

தன்  36வது பிறந்தநாளை  கொண்டாடும் ஸ்ரேயா தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் நரகாசூரன் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். 2001ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'இஷ்டம்' படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ஸ்ரேயா 2003ம் ஆண்டில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 

தமிழ் தெலுங்கு மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் ஸ்ரேயா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி, விஜய், தனுஷ், சிரஞ்சீவி, பவன் கல்யாண், நாகார்ஜுனா, பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ர்ரேயா.

36 வயதாகும் ஸ்ரேயா கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான தனது காதலரை திடீர் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.ஆனால், திருமணத்திற்கு பின்னும் நான் நடிப்பேன் என்று தெரிவித்திருந்த பின்னரே ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இதை தொடர்ந்து ஸ்ரேயா நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் செப்டம்பர் 13 அன்று ரிலீசாகவுள்ளது. 'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்' . 

நரகாசூரன் படத்தின் வெற்றியை பொறுத்தே ஸ்ரேயா சரனை தமிழ் படங்களில் பார்க்க இயலும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close