வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை..! நடிப்பில் துடிப்பு காட்டும் நடிகைகள்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Sep, 2018 07:36 pm

the-heroine-who-achieved-more-than-35-years-old

30 வயதான பெண்கள் என்றால் ஆண்ட்டிதான் என சொல்லும் கூட்டத்திற்கு நடுவே பலரை திரும்பி பார்க்கவைத்த பிரபலங்கள் பல.. பல..  சினிமா இல்லாத பிற துறைகளிள் இருக்கும் 30வயதுக்குள் மேல் உள்ள பெண்களே சாதிப்பது கடுமையான விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் சினிமாவில் தடம்பதித்த துடிப்பான நடிகைகளில் பேசக்கூடியவர்கள் இவர்களே!

அனுஷ்கா

தெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழ் வாசம் பொங்க தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனுஷ்கா, ஹீரோவே இல்லாமல் படங்களை வெற்றிப்பெற முடியும் என நிரூபித்தவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் யோகா மாஸ்டராக இருந்த அனுஷ்கா நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டார். தென்னிந்தியாவிலே ரூ. 5 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோயின் அனுஷ்காதான். நடிப்பை விட பைக் ஓட்டுவது இவருடைய ஹாபியாம். அனுஷ்கா நடிப்பில் பெருமளவு பேசப்பட்ட தமிழ்ப்படம் அருந்ததி, பாகுபலி, தெய்வத் திருமகள், தாண்டவம் போன்றவையாகும். இந்திய சினிமாவில் கோடிகளால் புரளவைத்தப்படம் பாகுபலி அனுஷ்கா வாழ்வையே திருப்பி போட்டது. இந்த இஞ்சி இடுப்பழகிக்கு வயது 37 தானாம்!  

நயன்தாரா 

கடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் அடக்கமாக எண்ட்ரிக் கொடுத்த நயன்தாரா, இன்று மலையாளம், தெலுங்கு என கால்ஷீட் நிரம்பி வழியும் அளவிற்கு பிஸியாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என தவமாய் தவமிருக்கும் நடிகைகள் மத்தியில் நயனுடன் நடிக்க வேண்டும் என பெரிய கதாநாயகர்களுடன் வரிசையில் நிற்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் பாராட்டப்படும் நயன்தாராவுக்கு ராஜா ராணி, அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வசூல் வேட்டையாக அமைந்தன. திருப்புமுனையாக அமைந்தன. அடுத்தடுத்து கையில் கால்ஷீட்டுடன் காத்திருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது என்றால் வாய் அடைத்துதான் போகவேண்டும். 

த்ரிஷா

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் தொடர்ந்து க்யூட் நடிகையாக வலம்வரும் த்ரிஷா இன்றும் பலருக்கு கனவு கன்னி. லேசா லேசா படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த த்ரிஷா சென்னை பொன்னு. தமிழ் பெண்ணாக இருந்தாலும் ஹிந்தி, பிரெஞ்ச், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் அமைதியாக களமிறங்கி மோகினி, அரண்மனை என பல கேரக்டர்களில் விஸ்வரூபம் எடுத்தவர். 35 வயதானாலும் இளமையாக இருக்கும் த்ரிஷா, நடிப்புக்கு முன் மிஸ் சென்னை என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராவார். த்ரிஷாவின் 96 என்ட்ரிக்காக தூங்காமால் காத்திருக்கும் இளைஞர்கள் ஏராளம்

சமந்தா

தமிழ், தெலுங்கு திரை உலகை க்யூட்டான சிரிப்பாலும், அழகான நடிப்பாலும் கலக்கிகொண்டிருக்கும் சமந்தா, மிக குறுகிய காலத்தில் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். யசோதா என்ற அழகிய தமிழ் இயற்பெயர் கொண்ட சமந்தாவும் சென்னை பொன்னுதான். விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் கெளரவ வேடத்தில் எண்ட்ரிக் கொடுத்தா சமந்தா, இதையடுத்து வெளிவந்த கத்தி, நான் ஈ, தங்கமகன் போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டாலும் சமந்தாவுக்கு 31 வயது என்றால் நம்ப முடிகிறதா?

காஜல் அகர்வால் 

கியூன் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் களமிறங்கிய காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என கால் பதிக்காத இடங்களே இல்லை. பரத்க்கு ஜோடியாக பழனி என்ற திரைப்படத்தின் மூலம் ஜப்பியாக அறிமுகமான காஜல் மாற்றாம், நான் மகான் அல்ல, ஜில்லா, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் சக்கைப்போடு போட்டு திரையுலகை ஆட்டிப்படைத்தார். வயசானாலும் அழகு மாறாமல் 33 வயதிலும் இளமையுடன் நடிக்கும் காஜலுக்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் ஏராளம்.... 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close