ரஜினியின்  2.0 பொங்கலுக்கும் வராதா? அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்!

  பா.பாரதி   | Last Modified : 17 Sep, 2018 12:23 am
2-0-update

சினிமா ரசிகர்களுக்கு ஒரு சின்ன குவிஸ்...

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அதிக முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதா அல்லது ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கியுள்ள 2.0 ரிலீஸ் தேதி  அதிக முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா?

தலை கிறுகிறுக்கிறதா?

2.0 படத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கினார் ஷங்கர். சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற எந்திரன் படத்தின்  2ம் பாகம் என்பதால்  ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் இந்த படத்தை காண ஆவலாக இருப்பது நிஜம்.

கிராபிக்ஸ் பணிகள் இழுத்தடித்துக்கொண்டே போவதால் ரிலீஸ் தேதியும்  தள்ளிக்கொண்டே  போகிறது. காலாவுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.பேட்டயை முந்துமா என்பது ஷங்கருக்கு மட்டுமே தெரியும். அண்மையில் வெளியான இதன் டீசர்  பெரும் சாதனையை  நிகழ்த்தி இருப்பது உண்மை. ஒரே நாளில்  3 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

படத்தின் பட்ஜெட்- 500 கோடி ரூபாய்க்கும் மேல். இந்தியாவில் எந்த படமும் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதில்லை. எல்லாம் சரி..ஷங்கர் ஏற்கனவே  அறிவித்திருந்த மாதிரி நவம்பரிலாவது ரிலீஸ்  ஆகுமா? சந்தேகம் என்கிறார்கள், பட யூனிட்  ஆட்கள்.  இன்றைய நிலவரப்படி பொங்கலுக்கு ரிலீஸ்  ஆகலாம். அதற்குள் சன் பிக்சர்சின்  பேட்ட முடிந்து விடுமாம்.

இதற்குள்ளாக பொங்கல் மட்டுமல்ல... அடுத்த தீபாவளியைக் கூட தாண்ட வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் தனிநபர் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குவதாக பிரச்னை கிளப்பியது நியாபகம் உள்ளதா... அப்படி பிரச்னை எழுந்தபோது பல நிறுவனங்களும் அதில் சிக்கின... இப்படி சிக்கிய நிறுவனங்களுள் ஒன்றுதான் 2.0 கிராபிக்ஸ் பணியை செய்யும் நிறுவனம். அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டார்களாம். இதனால், பணியை முடிக்க முடியவில்லையாம். 

கிராபிக்ஸ் செய்யாவிட்டாலும் பரவாயில்லை முடிந்த வரைக்குமான ஃபுட்டேஜை கொடுங்கள் வேறு நிறுவனத்தில் கொடுத்து முடித்துக்கொள்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் போராடி வருகிறார்களாம். இதற்கு மிகப்பெரிய சட்டப் போராட்டமே நடந்து வருகிறதாம். அதனால்தான் 2.0 வெளியாவதில் சிக்கல் என்கின்றனர். இது தெரிந்துதான் அடுத்த அடுத்த படங்களில் ரஜினியும் ஷங்கரும் பிஸியாகிவிட்டனர் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close