நெட்டிசன் பார்வை: 'செக்கச்சிவந்த வானம்' க்ளாஸா... க்ளோஸா?

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 09:07 pm
chekka-chivantha-vaanam-and-social-media-responses

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் 'செக்கச்சிவந்த வானம்' ரசிகர்களுடையே இருந்த காத்திருப்பை உடைத்து வியாழக்கிழமை வெளியானது. இப்படத்தை முதல் காட்சிகளில் கண்ட ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
அவற்றில் கவனிக்கவைத்தவை சில:

Kollywood Headmaster @KollywoodHM:

#செக்கச்சிவந்த வானம், மணிரத்னம் தனது மாறுப்பட்ட கதை பாணியிலும் திரைக்கதையிலும் உச்சத்தை தொட்டார். பல முன்னனி நடிகர்களை கொண்ட இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மேலும் வலுவூட்டுகிறது. அனைத்து கதபாத்திரங்களுக்கும் முக்கிய பங்கு தரப்பட்டுள்ளது. #ஏத்தி மற்றும் #ரசோல் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

The_Common_Man @Vettri_Maran:

'செக்க சிவந்த வானம்' படத்தின் முதல் பாதி, ரசிகர்களின் ஆர்வத்தை திரையை நோக்கி இழுக்கும் படி திரைக்கதை அமைந்துள்ளது. விண்டேஜ் மணிரத்னத்தின் இயக்கத்தை கிலாசிக் பாணியில் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஏஆர்அர் இசையும் அதற்கேற்ற திரையாக்கமும், அதற்கேற்ற நடிப்பும் படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கிறது. இக்கதையின் முதல் பாதியின் முடிவுகளை இரண்டாம் பாதி தீர்மானிக்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Gauthamvasudevmenon @menongautham

மணி சார் மற்றும் திறன் வாய்ந்த பல நடிகர்களும் இனைந்த இத்திரைப்படம் திரை ஆளுமைப் பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை, கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும், வசனங்களை செதுக்குவதிலும், இயக்குனர் திறன்படக் கையாண்டுள்ளர். ரசிகர்கள் பொறுமையை இழந்து ஆரவாரம் செய்யும் அளவிற்கு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Cheyyaru Balu: 

அப்பா டான் சேனாதிபதி. அவரது இடத்தை பிடிக்க மோதும் மூன்று மகன்கள்! இதுதான் ஒன் லைனர்!! படம் பிரமாதம்.

Dhaya Harikrishnan:

பழைய உருட்டு தான் கொஞ்சம் புதுசா...

மணிரத்னம் படம் என்றாலே ஏதாவது வித்தியாசமான கதைக்களம் இருக்கும் அப்படி இந்த திரைப்படம் அமையவில்லை என்பது என் கருத்து. படத்தில் 4 ஹீரோக்கள் இருந்தும் இறுதியில் விஜய் சேதுபதி முக்கியத்துவம் பெறுகிறார். வழக்கமான பாணியில் புரிந்தும் புரியாமலும் கதை போனாலும் எதிர்பார்ப்பு எரிச்சல் ஊட்டுகிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை துப்பாக்கி சத்தம் காதை கிழிக்கிறது எதற்கு எடுத்தாலும் கொலை கொலை. இறுதியில் அனைவருமே செத்து போகிறார்கள் கதை முடிகிறது. மணிரத்னம் அவர்களுக்கு சரக்கு குறைந்து விட்டதோ என என்ன தோன்றுகிறது. இசை சிறப்பு. ஒளிப்பதிவு வித்தியாசம். சிம்பு அங்கங்கே மின்னுகிறார். அரவிந்த் சாமியை கடைசி வரை கத்தி கொண்டே திரிய வைத்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி தேவைக்கு மட்டும் நடித்திருக்கிறார். அருண் விஜய் நடிப்பு மிக நிதானம். மற்றப்படி ஒன்று சொல்லும் படியாக இல்லை. மொத்தத்தில் பார்க்கலாம்.

Charu Nivedita:

செக்கச் சிவந்த வானம் மாதிரி ஒரு மட்டமான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. கொல போர். சிம்பு வரார். போறார். பிரகாஷ் ராஜ் பேசறார். விஜய் சேதுபதி வரார். கத்துறார். அர்விந்த் சாமி வரார். கத்துறார். சுடுறாறாங்க. சுடுறாங்க. மணிக்கும் வாழ்க்கைக்கும் தூரம் அதிகமாகமாச்சு. இடைவேளைக்குப் பிறகும் அறுவை தான். செம போர். செம தண்டம்.

Sandilyan Raju:

செக்கச்சிவந்த வானம் - மாஸ் | காற்று வெளியிடை படம் வந்தப்போ மணிரத்னத்தை கழுவி ஊத்தாத ஆளே இருக்க முடியாது.மணிரத்னத்துக்கு முடிவுரை வாசிச்சாங்க பலபேரு. ஆனா தன்னுடைய சினிமா மேக்கிங்குக்கு முடிவே கிடையாதுன்னு மணிரத்னம் செக்கச்சிவந்த வானம் மூலமா நிரூபிச்சிட்டாரு.

இது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட கமர்சியல் பொழுதுபோக்கு படம்தான். ஆனா எந்த ஹுரோவையும் துதிபாடாம ரசிகர்களை சொறிஞ்சி விடாம நியாயமாக எடுக்கப்பட்ட படம். படத்தோட முதல்பாதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு முடியுது. அதன்பின் லேசான தடுமாற்றத்தோட ஆரம்பிக்குற கதை பிறகு பரபரப்பாகி அருமையா முடியுது.இந்தமாதிரி ஒரு செம்மையான இறுதிக்காட்சியைப் பாத்து ரொம்ப நாளாச்சு.

நான்கு நடிகர்களுக்கும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் சரியா இருந்தாலும் நடிப்பளவுல ஸ்கோர் பண்றது அரவிந்த்சாமியும் விஜய்சேதுபதியும்தான். ஆனா மாஸ் காட்டுறது அருண்விஜய்யும் சிம்புவும். சிம்பு ஸ்க்ரீன்ல வந்தாலே ஒரு புத்துணர்வு வந்துடுது. இந்த எனர்ஜியை சிம்பு கண்டிப்பா அடுத்த லெவல்க்கு கொண்டு போவார்னு நம்புவோம்.

குருவுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச மணிரத்னம் படம் இது. தன்னுடைய மேட்டிமைத்தனத்தை கொஞ்சம் கை விட்டுட்டு தமிழ் ரசிகர்களுக்காக அவர் பண்ணுன படம்... யெஸ்.. மணிரத்னம் இஸ் பேக்.

Akilash sooravally:

கடல், காற்று வெளியிடை தந்த காயத்துக்கு இது ஓகே. ஆனா ஏன் இந்த படம்னு ஒரு கேள்வி வரும். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் செம்ம. ஒரு வாட்டி தாராளமா தியேட்டர்ல போய் படத்த பார்க்கலாம், ஆனா ஒரு வாட்டி தான் என்பதில் தான் மணி ரத்னத்தின் லெகஸி அடி வாங்குகின்றது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ரசிக்கலாம்.

Kotravai N:

#ccv தாங்கலப்பா சாமி! இப்படி ஒரு காமெடி கேங்க்ஸ்டர் படத்தை நான் பார்த்ததில்லை. சிறுவர்களின் திருடன் போலீஸ் விளையாட்டு இதை விட interesting ஆ இருக்கும். Utter "Brand" explotation. சூது கவ்வும்னு நீதி சொல்றது மட்டும் பிரச்சாரமில்லையா.. மக்கள் வாழ்க்கைப்பாட்டை சொன்னா பிரச்சாரமாம்.

இரா.குண அமுதன்:

செக்கச்சிவந்த வானம் - Mani Rathnam is Back!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் உறவுகள் கடந்து சென்றபடியே இருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு சூழலின் அதீதத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார் மணி ரத்னம். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட வெற்றிடம் சில காலமாக மணிரத்னம் படங்களில் நன்றாகவே தெரிந்தது. ஆனால் இம்முறை அந்தப் பிரச்சனை இல்லை. நிச்சயமாக இது ஒரு தேர்ந்த திரைக்கதை!

சகோதரர்களுக்கிடையே நிகழும் அதிகாரப் போட்டியே கதைக் களம். போட்டி கொலை செய்யும் அளவிற்குப் போகிறது. இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்விக்கு இடமில்லை. நம் சரித்திரம் ஏற்கனவே தந்தையைச் சிறை வைத்துவிட்டு, சகோதரர்களைக் கொலை செய்து அரியணை ஏறிய சுல்தான்களை பாட நூல்களில் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது...

மணிரத்னம் படங்கள் எப்போதும் நமக்குத் தருவது ஏதோ ஒரு உயர்குடியினர் வீட்டு விருந்து வைபவத்திற்கு சென்று வரும் அனுபவத்தைத் தான். இந்த முறை அந்தக் காரசாரமான விருந்து சுவைத்திருக்கிறது!

Rajendra Kumar @Rajendr86922635

செக்கச்சிவந்த வானம் - style of making-ல் மணிரத்னம்  best in Indian cinema - மணி சார் படத்தில் எல்லோரும் class ஆக எப்படித்தான் நடிக்கறாங்களோ?

- தொகுப்பு: சாரதி குமரன்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close