ஒரே வருஷத்துல 21 படங்களில் கலக்கிய ரஜினி!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 07:34 pm
rajini-birthday-special-interesting-facts-about-rajini

இந்தியா கடந்து உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

ரஜினியும் அவரது தொழில் முனை போட்டியளராகக் கருதப்படும் கமலும் இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். நினைத்தாலே இனிக்கும் படத்திற்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணையவேயில்லை

நடிகைகள் ஶ்ரீபிரியா மற்றும் ஶ்ரீதேவியுடன் இணைந்து இவர் அதிகப் படங்களில் நடித்துள்ளார். ரஜினி முதன் முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற திரைப்படம் 'நல்லவனுக்கு நல்லவன்'. 

1977 முதல் 1991 வரை ஒவ்வொரு வருடமும்  அதிகப் படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1978-ம் ஆண்டு மொத்தம் 21 படங்களில் நடித்துள்ளார். 

ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார்.  

ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள இவர், அதோடு சேர்த்து அறிவியல் மற்றும் அரசியல் புத்தகங்களை அதிகம் படிப்பார். 

கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி, வண்ணக் கலர் படங்கள், அனிமேஷன் படம், 3டி தொழில்நுட்பத்தில் உருவான படம், என்று இந்திய சினிமாவில் அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்திருக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டும் தான்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close