2018-ல் மண வாழ்க்கையில் இணைந்த நட்சத்திரங்கள்!

  Shalini   | Last Modified : 25 Dec, 2018 11:13 am
tamil-celebrities-wedding-of-2018

புத்தாண்டு நெருங்கி விட்டது. 2018-ன் இறுதியில் இருக்கும் நாம், இவ்வாண்டு நடந்த நட்சத்திரங்களின் திருமணங்களைப் பற்றிப் பார்ப்போம். 

நடிகை பாவனா - தயாரிப்பாளர் நவீன்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, பல படங்களில் நடித்த கேரளத்து வரவு பாவனா. இவரும் தயாரிப்பாளர் நவீனும் 5 ஆண்டுகளுக்கும் மேல் காதலித்து வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பாவனாவின் தந்தை மறைவால் திருமணம் தள்ளிப்போனது. பிறகு கடந்த ஜனவரி 22-ம் தேதி திருச்சூரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. 

நடிகர் கதிர் - சஞ்சனா 

'மதயானைக்கூட்டம்' திரைப்படத்தில் அறிமுகமாகி, கிருமி, விக்ரம் வேதா என கவனம் ஈர்த்தவர் நடிகர் கதிர். இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சஞ்சனாவுக்கும் மார்ச் 4-ம் தேதி ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் கதிர் நடித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை கீர்த்தனா - அக்‌ஷய்

'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர், நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன். வளர்ந்து பெரியவரானதும் நடிப்புத்துறையில் இருந்து விலகி, இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவருக்கும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் மார்ச் 8-ம் தேதி திருமணம் நடந்தது. அக்‌ஷய் 2014-ம் ஆண்டு பீட்சா திரைப்படத்தை இந்தியில் இயக்கியவர், தற்போது புதிய பட வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். 

நடிகை ஷ்ரேயா - ஆண்ட்ரே கோஸ்சீவ் 

'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நடித்துள்ள இவர் இயக்குநர் ஷங்கரின் 'சிவாஜி' படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 

இவருக்கும் ரஷ்ய டென்னீஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வுக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்து,  மார்ச் 12-ம் தேதி திருமணத்தில் முடிந்தது. 

நடிகர் சத்யா - பாவனா

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா 'புத்தகம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 'அமரகாவியம்' படத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தனதேவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இவருக்கும் துபாயைச் சேர்ந்த பாவனாவுக்கும் ஜூன் 22-ம் தேதி திருமணம் நடந்தது. 

நடிகை ஸ்வாதி - விஸாஷ்

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. இவரும் மலேஷியன் ஏர்லைன்ஸ் பைலட் விஸாஷும் காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம், ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்தது. 

நடிகை சுஜா வருணி - சிவக்குமார் 

பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நடிகை சுஜா வருணி. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இவரும் நடிகர் சிவக்குமாரும் 10 ஆண்டுகளுக்கும் மேல் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் நவம்பர் 19-ம் தேதி நடந்தது. 

சிங்கக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்த சிவக்குமார், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனும் ஆவார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close