'பேட்ட'க்கு பதில் சொல்லும் விஸ்வாசம்: டிரைலர் எப்படி இருக்கு?

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 03:21 pm
viswasam-trailer-review

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போதே  2019 பொங்கலுக்கு வரோம் என்ற தகவலுடன் தான் வேலைகளை தொடங்கினர். ஆனால் நடுவில் பேட்ட உருவாகி பொங்கல் ரேசில் சேர்ந்துக்கொண்டது. 

மேலும் அதன் டிரைலரும் முன்பே வெளியாகி விட்டது. விஸ்வாசம் டிரைலர் எப்போ வரும் என்று ரசிகர்கள் காத்திருக்க, நேற்று அறிவிப்பை வெளியிட்டனர். அதன் படி தற்போது டிரைலரும் வந்தாச்சு.

தொடக்கமே அஜித்தின் வசனத்தோடு தொடங்குகிறது டிரைலர். வாழ்க்கையில ஒரு தடவ கூட அழாத பணக்காரனும் இல்ல... ஒரு தடவ கூட சிரிக்காத ஏழையும் இல்ல என்று அஜித்தின் குரல் முடிந்ததும், தம்பி ராமய்யா குரலோடு வரும் அந்த ஒரு ப்ரேம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அஜித் கை உயர்த்தி வணக்கம் சொல்லும் காட்சியை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர். 

தெறிக்க விடலாமா... போலவே இதில் அடிச்சி தூக்கலாமா, அடேங்கப்பா என்று வசனங்கள் வருகின்றன. ஆனால் அதே டோனில் தான் இதையும் சொல்கிறார். இதெல்லம் சரி தான் ஆனால் நயன்தாராவிடம் நீங்க பேரழகி என்பதையும் அதே போல இழுத்து சிரித்துக் கொண்டு சொல்கிறார். கடந்த  படங்களில் தொடர்ந்து வெறப்பாக வந்த அஜித் இந்த டிரைலரில் நயன்தாரா வரும் காட்சிகளில் ஜாலி முகம் காட்டுகிறார். 

வில்லன் வந்து தன்னை ஹீரோ என கூறியதும் "என் கதைல நான் வில்லன் டா" என்கிறார். அப்படியே மங்காத்தா காலம் நினைவில் வந்தவர்கள் கையை தூக்கவும். 

இமானின் இசையில் தீம் மியூசிக் காட்சிகளுடம் பார்க்கும் போது நன்றாக தான்  இருக்கிறது. அனைத்துக் காட்சிகளையும் திருவிழா போலவே எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். 

பின்னர் வரும் காட்சிகள் அனைத்தும் படபடவென நகர உங்க மேல கொல கோவம் வருனும், ஆனா எனக்கு உங்கள புடிச்சிருக்கு சார் என்றும் லாங் லிவ்வு... என்றும் #Spreadlove பறக்கவிடுகிறார்.  இப்படி 'வீரம்' போல கலவையாக இருக்கும் டிரைலர் முன்பு 'பேட்ட' காட்டிய கெத்துக்கு பதில் சொல்வதோடு முடிகிறது. 

பேட்ட டிரைலரில், "ஏய் எவனுக்காவது குழந்த குட்டின்னு செண்டிமெண்ட் கின்டிமென்ட் இருந்த அப்டியே ஓடிப்போய்டு கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்" என்று ரஜினி கூறுவார். இது விஸ்வாசம் படத்தை தான் என்று பலர் கிளப்பி விட்டனர். 

அதற்கு பதில் அளிக்கும் வகையில் "பேரு தூக்குத்தூரை, தேனி மாவட்டம் ஊர்... கொடுவிளார்பட்டி; பொண்டாட்டி பேரு நிரஞ்சனா... பொண்ணு பெயர் சுவேதா ஒத்தைக்கு ஒத்த வாடா..." என அட்ரஸ் தருகிறார் தல..

அப்போ ஒத்தைக்கு ஒத்த... அதானே?

சிறப்பான தரமான சம்பவம்: ரஜினியின் பேட்ட டிரைலர் எப்படி இருக்கு?

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close