ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய விஜய்: வைரல் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 12:37 pm
vijay-met-fans-in-shooting-spot

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் ரசிகர்கள் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குநர் அட்லீயுடன் 3வது முறையாக விஜய் இணையும் தளபதி 63ன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

கடந்த 20ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தில் முதலில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்துக்காக சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். விஜய்யை காண திரண்ட ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்த பிறகு காரில் இருந்து இறங்க வேண்டாம் என்று பாதுகாவலர்கள் கூறிய பிறகும், நடிகர் விஜய் காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை பார்த்து கையசைக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close