நூற்றாண்டு காணும் வில்லன் போர்வையில் இருந்த உத்தமன் நம்பியார் !

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 03:13 pm
nambiyaar-100

50 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் வில்லனாக தனது கால் சுவடுகளை பதித்தவர் வில்லன் நம்பியார்.  இவர் இதே நாளில் 1919ல் பிறந்தார்.

ஏழு தலைமுறைகளை கடந்து  சினிமா திரையுலகில் நடித்தவர்  எம் என் நம்பியார்.  தனது உடல் பாவனைகளோடு நம்பியார் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை மிரட்டும் வண்ணம் இருக்கும். திரைப்படங்களில் காணப்படும் நம்பியார் மிக கொடூர தோற்றத்துடன் காட்சியளிப்பார்.  தனது கண்களின் வழியே விஷத்தை கொட்டும் வில்லனாகவே அவர் திரைப்படங்களில் வலம் வந்துள்ளார்.  பெரும்பாலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி திரைப்படங்களில் அவரது வில்லத்தனத்தை  கண்டு மிரளாதவர்களே இருக்க முடியாது.

வில்லத்தனத்திற்கு எடுத்துக்காட்டாக இன்று வரை  சொல்லப்படும் பெயர் "நம்பியார்".  ஆனால் அவரது உண்மையான வாழ்க்கையில்  உத்தமனாகவே வாழ்ந்துள்ளார். மிகவும் பக்தியுள்ள மனிதனாக தனது வாழ் நாள் முழுதும் இருந்தவர் எம்.என்.நம்பியார்.  மேலும்  ச‌பரிமலை ஸ்ரீ ஐய்யப்பனின்  தீவிர பக்தனாகவும், தனது சீடர்களுக்கிடையே புகழ்பெற்ற குருசுவாமியாகவும் இருந்தார்.கேரளாவில் பிறந்த இவர் ஒரு சுத்தமான சைவம்.  பெரும்பாலும் பெண் மோகம் கொண்டவராக காட்டப்பட்ட நம்பியார், உண்மையில் தான் சாப்பிடும் உணவை கூட‌ தனது மனைவியான ருக்மணி நம்பியார் தவிர மற்றவர் சமைத்த உணவுகளை  உண்ண மறுத்தவர் நம்பியார். 

இவரின் முதல் படமான பக்த ராமதாஸ் படத்தில் நம்பியார் காமெடியனாகவே அறிமுகம் ஆனார். மேலும் இவரின் முதல் ஊதியம் 3ரூபாய் மட்டுமே. அதிலும் 1 ரூபாயை தயாரிப்பு  நிறுவன‌த்திடம் திரும்ப கொடுத்துவிட்டு, 2 ரூபாயை தனது தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார் எம் என் நம்பியார். மேலும் "திகம்பர சாமியார்" என்னும் திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார் நம்பியார்.

1000திற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நம்பியார்.இவரின் மந்திர குமாரி,வேலைக்காரி,தில்லானா மோகனாம்பால் உள்ளிட்ட பல படங்களில் தனது  நடிப்பின் மூலம் பயம் காட்டியவர்.  இவர் வில்லனாக மட்டுமல்ல "ஜென்டில் மேன்" படத்தில் அப்பாவியான அப்பாவாகவும், பூவே உனக்காக, வின்னர் போன்ற படங்களில் அன்பான தாத்தாவகவும் தனது சிறந்த  நடிப்பை பதிவுசெய்துள்ளார் நம்பியார்.


 
நம்பியார் நடித்த‌ கடைசி திரைப்படம் சுதேசி. மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  நம்பியாரின் முக பாவனை, கை பாவனை போன்றவை இன்றும் பிரபலம். நம்பியார் போல  நடிக்க இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது. வில்லன் நம்பியார் கடந்த 2008 நவம்பர் 19ல் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close