அல்டிமேட் ஸ்டார் 'தல அஜித்'

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 05:47 pm
thala-ajith-kumar

தன்னுடைய திரைப்பட வசனங்களுக்கு ஏற்ப தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித், எந்தவித பின்புலமும்  இன்றி திரை உலகிற்குள் வந்த அஜித் தனது திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு இன்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். 

காதல் மன்னனாக வலம் வந்து இன்று ஆக்ஷன் நாயகனாக அனைவரையும் ஈர்த்தவர் அஜித் குமார். ஐதராபாத்தில் மே 1ம் தேதி பிறந்த இவருக்கு தமிழ் பேச தெரியாது. ஆனால் தனது தன்னிகரில்லா தன்னம்பிக்கையால், தமிழில் தனது முதல் படமான அமராவதியில் தமிழ் வசனங்களை அவ்வளவு பொருத்தமாக பேசியிருந்தார். இன்னும் ஒரு சிறப்பாய்,1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாத அஜித்,  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலைட்டாக  நியமிக்கப்பட்டார். 

அமராவதி, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, நேசம் என தான்  நடித்த படங்களில் தன்னை சிறந்த காதலனாக அடையாளப்படுத்தினார் அஜித். இவர் நடித்த காதல் மன்னன் திரைப்படத்தில் இவரின் அழகிய நடிப்பால் 'காதல் மன்னன் அஜித்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். காதல் மன்னனாக தன்னை  நிலைநிறுத்திக்கொள்ள விரும்பாத அஜித் 2000ற்கு  மேல் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவரின் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படத்தில் தந்தை, மகனாக நடித்து ஆக்ஷன் நாயகனாக தன்னை அடையாளப்படுத்தினார் அஜித். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் ஆக்ஷ‌ன் நாயகனாக நடித்த சில படங்கள் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை கொடுக்கா விட்டாலும்,  அதனையடுத்து, 'V' வரிசையில் திரைக்கு வந்த வேதாளம், விவேகம், வீரம், விசுவாசம்  உள்ளிட்ட‌ திரைப்படங்கள்  மெகா ஹிட் கொடுத்தது. 

நடிப்பில் மட்டும் ஆக்ஷன் காட்டாமல் உண்மை வாழ்க்கையிலும் தனது வீரத்தை நிலை நாட்டியவர் அஜித். அதன்படி இரு சக்கர வாகன பந்தயம், கார் பந்தயம் என தனது வீரத்தை பிரதிபலிக்கிறார் அஜித்.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

தான் மட்டும் அல்லாது தன்னை சுற்றி இருப்பவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்னும் மனப்பாங்கை கொண்டவர் அஜித்.இவர் வீட்டில் வேலை  செய்யும் 12 பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் உதவி என வரும் நபர்களுக்கு கட்டாயம் உதவி செய்யும் மனப்பாங்கு கொண்டவர் அஜித். மற்றவர்களுக்கு உதவி செய்யும் இவரின் மனப்பாங்கே அஜித்தை 'தல' என்கிற பெயருடன் வைத்துள்ளது என கூறினால் மிகையாகாது. இவரின் பிறந்த நாளான மே 1யை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தம் ஆகி விட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close