அன்று முதல் இன்று வரை இசைஞானியின் இசைப்பயணம்!

  கண்மணி   | Last Modified : 02 Jun, 2019 12:17 pm
ilayraja-s-birthday-today

தமிழகத்தில் பிறந்து இசையால் உலகப் புகழ் பெற்றவர் இசைஞானி இளையராஜா. இவரின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில்  ராமசாமி, சின்னத்தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக  பிறந்தார். தனது 3 சகோதரர்களுடன் சேர்ந்து சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார் இளையராஜா.

இவர் சினிமாவின் மீது கொண்ட காதலால் 1969 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து தன்ராஜ் என்பவரிடம் பியானோ கருவியையும், கிடார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டதோடு, லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார். 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்தின் மூல இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் இசையில் ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." இன்றளவும் மனதில் நிற்பவை.

அதன் பிறகு கிட்டத்தட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் 5000த்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி. திரைப்படங்களில் ராகங்கள் மூலம் வித்தியாசம் காட்டிய இவரை கௌரவிக்கும் விதமாக பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற  உயரிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டது. 90ஸ் என்றாலே இளையராஜா என நமது மனதில் பதிந்து விட்ட இவர், தமிழக நாட்டுப்புற இசைமட்டுமன்றி, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் மிகுந்த புலமையும், முறையான பயிற்சியும் கொண்டவர்.

இவர் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற ராகங்களில் கீரவாணி, கல்யாணி, பந்துவராளி ,ரசிகரஞ்சனி உள்ளிட்ட அற்புத ராகங்கள் குறிப்பிடத்தக்கவை. பந்துவராளி ராகத்தில் ஆர்யாவின் 'நான் கடவுள்' திரைப்படத்தில் இவர் இசையமைத்த 'ஓம் சிவோஹம்...' பாடல் இன்றளவும் சிவபக்தி கமழும் பாடலாக போற்றப்படுகிறது. இவர் மட்டுமல்ல, இவரின் வாரிசுகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி ஆகியோரும் இசைத்தாய்க்கு சேவை செய்து வருகின்றனர்.

இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தனது இசை புலமையை நிலை நாட்டியவர்.  இன்று வரை இரவின் தாலாட்டு பலருக்கு இளையராஜாதான். இத்தகு பெருமையுடைய இசைத்தாயின் செல்ல மகனான இளையராஜவுக்கு இன்று பிறந்த நாள் ( ஜூன் 2). இதையடுத்து, பிரபலங்களும், அவரது ரசிகர்கள் பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களிலும் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close