பின்னணிக் குரலின் ஜாம்பவானுக்கு இன்று பிறந்த நாள்

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 12:33 pm
today-spbalasubramaniam-s-birthday

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் இயற்பெயரை கொண்ட எஸ்.பி.பி ஆந்திர மாநிலத்தில் ஜூன் 4ம் தேதி பிறந்தார். தந்தையின் பொறியாளர் கனவை நிறைவேற்ற கல்லூரியில் சேர்ந்த எஸ்பிபி,  அக்கல்லூரிகளில் நடந்த ஒவ்வொரு பாடல் போட்டியிலும் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார். மகனின் ஆசையையும் ,திறமையையும் மதித்த எஸ்பிபியின் பெற்றோர்கள் சினிமாவில் பாட அனுமதியளிக்க, 1966ஆம் ஆண்டு  தெலுங்கில் வெளியான  'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா'என்னும் படத்தில்  தனது முதல் பாடலை பாடினார்.

பின்னர் தமிழில் 1969ஆம் ஆண்டு  எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ஹோட்டல் ரம்பா என்கிற படத்திற்கான பாடலை எஸ்பிபி பாடினர். இதனை தொடர்ந்து இவர் பாடிய  அடிமைப் பெண் திரைப்படத்தின் 'ஆயிரம் நிலவே' பாடலும்,  சாந்தி நிலையம் திரைப்படத்தின்  இயற்கையெனும் இளையக்கன்னி' பாடலும் மிகப்பெரிய  புகழை இவருக்கு பெற்று தந்தது.  

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் எஸ்பிபி, ஆறு முறை தேசிய விருதுகளையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்னும் உயரிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் தன் வசப்படுத்திய சாதனைக்கு சொந்தக்காரர். மேலும்இவரது முத்தாய்ப்பான சாதனைகளாக , ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழியிலும்,  தமிழ் மொழியில் 19 பாடல்களையும் ஒரேநாளிலும், இந்தி மொழியில் 16 பாடல்களையும் 6மணி நேரத்திலும்  பாடி சாதனை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா எஸ்பிபி கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றளவும் நின்று பேசும், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய வகையில் உள்ளது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில், மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் பாடிய பெருமைக்குரியவர் எஸ்பிபி. இவர் அன்றைய இசை ஜாம்பவான் ௭ம்.௭ஸ்.வி முதல் இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளரான அனிரூத்  வரையிலான இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்களாக உள்ளது.

தெலுங்கு கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் தனது இனிமையான குரலால் பாடல்களை பாடி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எஸ்பிபி. இவர் திரைப்பட பாடகர் மட்டுமல்லாது,  திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளங்களை கொண்டவர்.

முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில், கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்று தனது சாதனைக்கு வைர மகுடம் சூட்டியவர் எஸ். பி. பி.  இவரது மகன் எஸ். பி. பி. சரணும் சிறந்த பின்னனி பாடகராக திகழ்ந்து வருகிறார். 

இந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில்  ர‌ஜினியின் அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அனிரூத்துடன் இணைந்து எஸ்பிபி பாடினார். அந்த பாடல் பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாதனையாளரான‌ எஸ்பிபிக்கு  இன்று பிறந்த நாள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close