இளைய தளபதி விஜய், தற்போது தளபதி விஜய் ஆகிவிட்டார். தலயா அல்லது தளபதியா என்ற போட்டியால், திரையங்குகள் நிரம்பி வழிவதை, அவர்களின் படங்கள் வெளியாகும் போது இன்றும் பார்க்க முடியும்.
அவரை சிறு வயது முதலே பார்த்து ரசித்து வரும் பலரும் இன்று நடுத்தர வயதினாக உள்ள நிலையில், இன்றைய சிறு குழந்தகளையும் ஈர்க்கும் வகையில் நடிப்பதே விஜயின் சிறப்பு.
பூவே உனக்காக துவங்கி, பிரியமானவளே, யூத், குஷி என பல படங்களில் குறும்புக்கார விஜயாக நடித்த அவர், தலைவா, கத்தி போன்ற படங்களில் ஓர் சூப்பர் ஹூரோவாகவே ரசிகர்களின் கண்ணுக்கு தெரிந்தார்.
திருமலை, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் லோக்கல் பாயாக நடத்த விஜய், ப்ரண்ட் படத்தில் அடித்த லுாட்டியை யாராலும் மறக்க முடியாது. சின்னஞ்சிறுசுகள் முதல் இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண் ரசிகைகள் என அனைத்து தரப்பினரையும் தன் நடிப்பாலும், நடனத்தாலும் கட்டிப்போட்டுள்ளார் விஜய்.
வரும் 22ம் தேதி, தன் 45வது வயதில் காலடி எடுத்து வைக்கும் அவருக்கு நியூஸ்டிஎம் சார்பில், அட்வான்ஸ்ட் ஹேப்பி பர்த்டே விஷஸ்.
newstm.in