தளபதி விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்!

  விசேஷா   | Last Modified : 20 Jun, 2019 09:19 pm
acter-vijay-birthday-speacial


1974 ஜூன் 22 தளபதி வியஜ் பிறந்த நாள்!


தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஜய், விஜயகாந்துடன் சில படங்களிலும், 1985ல் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில், ரஜினியுடனும் சேர்ந்து நடித்துள்ளார். 

கோயம்புத்துார் மாப்பிள்ளை, ரசிகன், உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை ஓர் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்த்திக் கொண்ட விஜய், ராஜாவின் பார்வையிலே படத்தில், அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார். 

1996ல் வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக இந்த படத்திற்குப் பின், ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 

சிவாஜியுடன் இவர் சேர்ந்து நடித்த லவ் டுடே, மணிரத்னத்தின் இயக்கத்தின் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த நேருக்கு நேர் உள்ளிட்ட படங்கள் விஜயை வேறு லெவலுக்கு அழைத்துச் சென்றன. 

சண்டை காட்சிகள் மட்டுமின்றி நடனத்திலும் சிறந்து விளங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தன் ரசிகராக ஆக்கிக் கொண்டார் நடிகர் விஜய். 

சிம்ரன், ஜோதிகா, சினேகா, அனுஷ்கா, த்ரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன் என முன்னணி கதாநாயகியர் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் தளபதி விஜய். 

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுடன் விஜய் நடித்த கிளைமாக்ஸ் காட்சிகள் அசத்தல் என்றால், போக்கிரியில் அதே பிரகாஷ் ராஜுனான சீன்கள் அசத்தலோ அசத்தல்!

திருமலை, திருப்பாச்சி, கத்தி, துப்பாக்கி, சர்க்கார் படங்களில் விஜயின் வேட்டை படுஜோர்! பிரண்ட்ஸ் திரைப்படத்தில் மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த இவர், அந்த படத்தில் வடிவேலுடன் சேர்ந்து அடித்த லுாட்டி, இன்றும் படு சூப்பர். சச்சின் படத்திலும் சரி, சுறா படத்திலும் சரி, விஜய் - வடிவேலு காமினேஷன் சூப்பரோ சூப்பர் எனலாம். 

தலைவா படத்தின் மூலம் தான் ஓர் தலைவனாக உருவெடுக்க விரும்புவதை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்திய விஜய், தொடர்ந்து வந்த சர்க்கார் படத்தின் மூலம், புதிய அரசியல் புரட்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close