விமல், ஆனந்தி நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் விமல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள படம் மன்னர் வகையறா. இதில் விமல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், 'யாரடி நீ மோகினி' கார்த்திக் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் அணிவகுத்து நிற்கிறது.
தனது ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கலக்கல் கமர்ஷியல் பேக்கேஜ் ஆக படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் பூபதி பாண்டியன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நாயகன் விமலுக்கும், காமெடியன் ரோபோ சங்கருக்கும் நடுவே உள்ள காமெடி சீன்கள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என உத்திரவாதம் தருகிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
‘மன்னர் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரியில் பொங்கல் திருநாளன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ‘மன்னர் வகையறா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. காதல், செண்டிமெண்ட், காமெடி, அதிரடி ஆக்ஷன்... என பட்டையைக் கிளப்புகிறது இந்த டீசர்.