செம லைக்ஸ் குவிக்கும் ‘ஸ்கெட்ச்’ பட பாடல்

  பால பாரதி   | Last Modified : 26 Dec, 2017 03:08 pm


விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கும்  ‘ஸ்கெட்ச்’ படத்தில் இடம்பெறும் ‘அட்சி புட்சி’ எனும் பாடலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது.

நடிகர் விக்ரம் கைவசம், கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 


சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மூவிங் ஃப்ரேம் என்ற நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். 

சமீபத்தில், வெளியிடப்பட்ட விக்ரம் பாடிய ‘கனவே கனவே’ பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் ‘தாடிக்காரா’எனும் பாடலை தமனுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். 


இந்நிலையில் தற்போது, ‘ஸ்கெட்ச்’ படத்தில் இடம்பெறும் ‘அட்சி புட்சி’ எனும் பாடலை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் சந்தரே எழுதி, பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close