குலேபகாவலி பட ட்ரெய்லர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 30 Dec, 2017 10:48 am


பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் தயாராகியுள்ள ‘குலேபகாவலி’ படத்தின்  ட்ரெய்லரை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இயக்குநர் நாற்காலியை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு, நடிப்பில் பிஸியாகி இருக்கும் பிரபுதேவா, ‘தேவி’ படத்திற்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’.கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். மேலும், ரேவதி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இரட்டையர்கள் விவேக் – மெர்வின் இணைந்து இசையமைத்துள்ள இபடத்திற்கு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். 


பொங்கல் பண்டிகைக்கு வெளிவர இருக்கும் இப்படத்தின் இருத்திக் கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டன. அதில், ‘குலேபா’ பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும்,‘சேராமல் போனால்’பாடலை நடிகர் மாதவனும்,‘ஹார்ட்டுக்குள்ளே’பாடலை நடிகர் விஜய் சேதுபதியும், ‘யு ஆர் த ஒன்’பாடலை நடிகர் சித்தார்த்தும் வெளியிட்டனர். 

இப்பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் குழு, கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, ‘குலேபகாவலி’படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. 


  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close