'சூப்பர் டீலக்ஸ்’ பட டீசர்

  பால பாரதி   | Last Modified : 04 Jan, 2018 12:31 pm


விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

விஜய் சேதுபதியின் கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் உள்ளன. அதில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் அடங்கும். இப்படத்தை ‘ஆரண்ய காண்டம்’ படத்தை கொடுத்த தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். அத்துடன் தியாகராஜன் குமாரராஜாவே சொந்தமாக தயாரிகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர். இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர்.


இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்கிற திருநங்கையாக தோன்றுகிறார். சமீபத்தில், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு படத்துக்கு பரபரப்பை கூட்டினர். விஜய் சேதுபதி திருநங்கையாக இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 


தற்போது, இப்படத்தில் சமந்தா கேரக்டர் பெயர் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வேம்பு என்றும், அதற்கான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close