உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்' பட ட்ரெய்லர் வெளியானது

  பால பாரதி   | Last Modified : 08 Jan, 2018 06:41 pm


தயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'நிமிர்' படத்தின்  ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி,  எம்.எஸ்.பாஸ்கர், சண்முக ராஜ், அருள் ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் 'நிமிர்'. ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரித்துள்ளார். 

குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதில் கைதேர்ந்த இயக்குநர் ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 


'நிமிர்' படத்தைப் பார்த்த தணிக்கை குழு, படத்தைப் பாராட்டியதோடு 'நிமிர்' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழு பயங்கர உற்சாகத்தில் உள்ளனர். 

இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், 'நிமிர்' ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் வலம் வருகிறது.    


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close