இயக்குநர் அமீர் வெளியிட்ட அருவா சண்ட பட டீசர்

  பால பாரதி   | Last Modified : 09 Jan, 2018 12:46 pm


‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். 

'சிலந்தி', ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தில் புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகிறார். மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். 

ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கும் இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.


கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close