வைரலாகும் அருள்நிதியின் திகில் பட ட்ரெய்லர்

  பால பாரதி   | Last Modified : 14 Jan, 2018 08:47 am


நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்கிற  த்ரில்லர் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து  நடிக்கும் நடிகர்களின் பட்டியலில் அருள்நிதியும் ஒருவர். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு த்ரில்லர் படமாகும். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மஹிமா நடிக்கிறார். அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் இயக்குகிறார். ஆக்சஸ் ஃபிலிம் பேக்ட்ரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 


இது குறித்து தயாரிப்பாளர் டில்லி பாபு கூறுகையில், ''இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது. ரசிகர்கள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ட்ரெய்லருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குநர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்'' என்றார். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close