அர்ஜுனின் ‘சொல்லிவிடவா’பட 2-வது டிரெய்லர்

  பால பாரதி   | Last Modified : 27 Jan, 2018 06:35 pm


‘ஆக்சன் கிங்' அர்ஜுன் தயாரித்து இயக்கிவரும் படம் 'சொல்லிவிடவா'. இதில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கன்னடப்பட நாயகன் சந்திரன் குமார் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவும், சந்திரன் குமாரும் டிவி சேனலில் பணிபுரியும் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளனர்.


இவர்களுக்கிடையே ஏற்படும் காதலும், அதையடுத்து வரும் மோதலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுமாம். மேலும் சதிஷ், யோகி பாபு இருவரின் காமெடி ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தயாரித்து இயக்கும் அர்ஜுன்,  முக்கிய வேடத்தில் வருகிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  டீசர், இதையடுத்து  ஜெயம் ரவி வெளியிட்ட பாடல் வீடியோ, ட்ரெய்லர் போன்றவை ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது,  இயக்குநர் அட்லீ இப்படத்தின் மற்றுமொரு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இதில் பல அதிரடி காட்சிகளும், நம் நாட்டைக்  காப்பாற்றும் இராணுவ வீரர்கள் ஈடுபடும் சாகசமும் இடம் பெற்றுள்ளது. மேலும், நாயகன் நாயகி நடுவே இருக்கும் நெருக்கமான காதல் காட்சிகளும், காமெடி சீன்களும் இடம்பெற்றுள்ளன. இந்த  ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close