அர்ஜுனின் ‘சொல்லிவிடவா’ பட லிரிக் வீடியோ

  பால பாரதி   | Last Modified : 03 Feb, 2018 10:36 am


அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள  'சொல்லிவிடவா' படத்தின் லிரிக் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.   

ரசிகர்கள் மத்தியில் ‘ஆக்சன் கிங்' என அடையாளம் காட்டப்பட்டிருக்கும்  அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'சொல்லிவிடவா'. இதில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க,  அவருக்கு ஜோடியாக கன்னடப்பட நாயகன் சந்திரன் குமார் நடித்திருக்கிறார்.


இந்தப் படத்தில் நாயகி ஐஸ்வர்யா, நாயகன் சந்திரன் குமார் இருவரும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளனராம்.  இவர்களுக்கிடையே ஏற்படும் காதலும், அதையடுத்து வரும் மோதலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுமாம். மேலும் சதிஷ், யோகி பாபு இருவரின் காமெடி ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன்  முக்கிய வேடத்திலும்  வருகிறார் அர்ஜுன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  டீசர், பாடல் வீடியோ, இரண்டு  ட்ரெய்லர்கள் போன்றவை வெளியிடப்பட்டன. பல அதிரடி காட்சிகளும், நம் நாட்டைக்  காப்பாற்றும் இராணுவ வீரர்கள் ஈடுபடும் சாகசமும், நாயகன் நாயகி நடுவே இருக்கும் நெருக்கமான காதல் காட்சிகளும்  ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது, ‘சொல்லிவிடவா’ படத்தின் லிரிக் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.   


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close