விஷால் வெளியிட்ட ‘நட்புனா என்னனு தெரியுமா?’பட டீசர்

  பால பாரதி   | Last Modified : 03 Feb, 2018 08:41 pm


‘நட்புனா என்னனு தெரியுமா?’படத்தின் டீசரை, நடிகர் விஷால் நேற்று வெளியிட்டார். 

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’இதில், விஜய் டிவி புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.


இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் கவின், நாயகி ரம்யா நம்பீசன் உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ரசிகர்களுக்கு தங்ககாசு, டிவி, செல்போன் போன்ற பரிசுகளை வழங்கினர். இந்நிலையில், நட்பை மையப்படுத்திய இந்தப் படத்தின் டீசரை நடிகர் விஷால், நேற்று வி மூவிஸ் பட அலுவலகத்துக்கு வந்து  வெளியிட்டார். 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close