'6 அத்தியாயம்’ பட டீசர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 03 Feb, 2018 08:59 pm


ஆறு கதைகள், ஆறு இயக்குனர்கள், ஒரே திரைப்படம் என புதிய முயற்சியில் உருவாகியுள்ள '6 அத்தியாயம்’ படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ்சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் '6 அத்தியாயம்’.இதன் டைட்டிலுக்கு பொருத்தமாக இப்படத்தில், அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல கதையின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் கிளைமாக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

‘தொட்டால் தொடரும்’பட இயக்குநர் கேபிள் சங்கர், எழுத்தாளர் அஜயன் பாலா, சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என ஆறு பேர் சேர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.


இதில் தமன், விஷ்ணு,‘பசங்க’கிஷோர், சஞ்சய், வினோத், பேபி சாதன்யா, இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளனர். 

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை இயக்குநர் பாரதிராஜாவுக்கு  திரையிட்டு காட்டப்பட்டது. புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா சிலாகித்தார். இந்நிலையில், '6 அத்தியாயம்’படத்தின் டீசர் படக்குழுவினரால் நேற்று வெளியிடப்பட்டு இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.   


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close