'பியார் பிரேமா காதல்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 14 Feb, 2018 08:49 pm


பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஹரிஷ் - ரைசா இருவரும்ஜோடியாக நடித்திருக்கும்  'பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஹரிஷ் - ரைசா இருவரும் 'பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை இளன் இயக்குகிறார், படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 


இந்த படத்தின் காதல் ரசனை மிகுந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிக் பாஸ் ஜோடிகளான ஹரிஷ்-ரைசா இருவரும் நெருக்கமான காதலர்களாக தோன்றுவதாலும், படத்தின் தலைப்பிலேயே காதல் பொங்கி வழிவதாலும் இந்தப் படம் இளமை துள்ளும் காதல் கதையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காதலர் தினமான இன்று 'பியார் பிரேமா காதல்’பட சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close