'நாச்சியார்' ப்ரொமோ வீடியோவிலும் வில்லங்கம் செய்த பாலா

  பால பாரதி   | Last Modified : 15 Feb, 2018 12:58 pm

'நாச்சியார்' படத்தின் ப்ரொமோ வீடியோவில் மீண்டும் ஒரு வில்லங்கத்தை செய்திருக்கிறார் இயக்குநர் பாலா. 

இயக்குநர் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் 'நாச்சியார்'. இதில் ஜி.வி. பிரகாஷ் - ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

'நாச்சியார்' படத்தின் முதல் டீஸர் வெளியான போது அதில், ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையானது.

நாளை படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நேற்று மாலை படத்தின் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார் பாலா. அதில், அனைத்து மதங்களைப் பற்றிய பாடல்வருகின்றது. இறுதியில் ஜோதிகா, 'கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்னு தான் 'என்கிறார்.

.

வெறும் வாயையே மென்று, அதை பிரச்னையாக்குவதற்கென்றே சிலர் காத்திருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்கும்போது, ஜோதிகாவை இப்படி ஒரு வசனத்தை பேசவைத்து சும்மா இருக்கும் வாய்க்கு அவல் அள்ளிப் போட்டிருக்கிறார் இயக்குநர் பாலா, மதம் பிடித்து போல அல்லவா ஆகிவிடுவார்கள் மத வாதிகள்!

 ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு யார், யாரெல்லாம் கிளம்பப் போகிறார்களோ? சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close