'கோலி சோடா 2' படத்தின் டீசர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 15 Feb, 2018 01:09 pm


சமுத்திரக்கனி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  'கோலி சோடா 2' படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. 

ஒளிப்பதிவாளராக இருந்து வெற்றிகரமான இயக்குநராக மாறியிருக்கும் விஜய் மில்டனின் 'கோலி சோடா'வின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.இதில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. 


அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு உருவாகியிருக்கும் 'கோலி சோடா 2' விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வாங்கியிருப்பது 'கோலி சோடா 2' படக்குழுவை ஊக்கப்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில், 'கோலி சோடா 2' படத்தின் டீசர் வெளியாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close