இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனை இம்ப்ரெஸ் செய்த ‘பேரழகி’!

  பால பாரதி   | Last Modified : 28 Feb, 2018 08:02 pm


இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், ‘பேரழகி ஐ.எஸ்.ஓ' என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். 

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.இதில்  'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி' பட நாயகி  ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பழம்பெரும் நடிகை சச்சு,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், சரவண சுப்பையா  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே.நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்ய, சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை  மற்றும் பட வெளியீடு  நடக்கயிருக்கிறது.

இந்நிலையில், தேசிய விருதுபெற்ற‘இயற்கை’,ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’போன்ற திரைப்படங்களை தந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், 'பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். அப்போது, ,‘பேரழகி ஐ.எஸ்.ஓ' என்கிற வித்தியாசமான படத்தலைப்பு தன்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்ததாக கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close