‘மெர்குரி’படத்தின் டீசர் ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 08 Mar, 2018 04:45 pm


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்திருக்கும் ‘மெர்குரி’படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. 

'பீட்சா’,‘ஜிகர்தண்டா’,‘இறைவி’போன்ற மாறுபட்ட படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்து ரஜினியை இயக்குவதால் கோலிவுட்டின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். 


ரஜினி படத்தை சீக்கிரமே தொடங்க இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், முன்னதாக, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து‘மெர்குரி’என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.  

இப்படத்தில் வித்தியாசமான முயற்சியாக படம் முழுவதும் வசனமே இல்லாத மௌனப் படமாக உருவாக்கியுள்ளார். சைலன்ட் த்ரில்லர் பாணியில் உருவாக்கியுள்ள இந்தப் படம் சீக்கிரம் திரைக்கு வர இருக்கிறது. இதுவொருமௌனப் படம் என்பதால் இந்தப் படத்தை இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில், 'மெர்குரி' படத்தின் டீசர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.   


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close