'நட்புனா என்னன்னு தெரியுமா?’ பட ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 15 Mar, 2018 12:55 pm


ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ படத்தின்  ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

விஜய் டிவி புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்  நடித்துள்ளார் படம்‘நட்புனா என்னன்னு தெரியுமா?’. அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 


நட்பை மையப்படுத்திய இந்தப் படத்தின் டீசரை நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்டார். முன்னதாக, இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிலையில்,‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ படத்தின்  ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close