மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி நடித்த ‘மிஸ்ஸிங்’ ட்ரெய்லர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 24 Mar, 2018 11:54 pm


மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி நடித்த ‘மிஸ்ஸிங்’ என்கிற பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.   

‘காதலர் தேசம்’,‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்திருக்கும் தபு, பாலிவுட்டில் செட்டிலாகி உள்ளார். அவர், 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த‘தில்பே மத்லே யார்’மற்றும்‘காத்’ஆகிய படங்களில் மனோஜ் பாஜ்பாய் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.


இந்நிலையில், மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி,  ‘மிஸ்ஸிங்’ என்கிற படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முகுல் அபையங்கர் இயக்கியுள்ள இப்படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்தது. இதில் முக்கிய வேடத்தில் அன்னு கபூர் நடித்துள்ளார். 

ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் புரொடக்சன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார். 

ஏப்ரல் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close