மாதவன் வெளியிட்ட 'மிஸ்டர் சந்திரமௌலி' ட்ரெய்லர்

  பால பாரதி   | Last Modified : 26 Apr, 2018 11:43 am


'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின்  ட்ரெய்லரை நடிகர் மாதவன் வெளியிட்டார். 

நவரச நாயகன் கார்த்திக் வாரிசு கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில், நவரச நாயகன் கார்த்திக் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரெஜினாவும், வரலட்சுமியும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர்  ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 


சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தை திரு இயக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். 

'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, சாந்தனு, இயக்குநர்கள் சுசீந்திரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 


இதையடுத்து, ’மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் ட்ரெய்லரை நடிகர் மாதவன் நேற்று மாலை ரிலீஸ் செய்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close