’கஜினிகாந்த்’பட ட்ரெய்லர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 01 May, 2018 10:38 am


ஆர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ’கஜினிகாந்த்’ படத்தின்  ட்ரெய்லர் வெளிவந்திருக்கிறது.

’ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் படம் ’கஜினிகாந்த்’.இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மதுமிதா, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 


ரஜினிகாந்த் பெயரை நினைவு படுத்தும் வகையில் உள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ரஜினி பிறந்த நாளான்று ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினிகாந்த் இருப்பதைப் போன்ற கெட்டப்பில் ஆர்யா இருந்த ’கஜினிகாந்த்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து,’கஜினிகாந்த்’படத்தின் சிங்கிள் ட்ராக்கை நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட, அதற்கும் ரசிகர்கள் ஆதரவு பெறுகியது. இந்நிலையில், ’கஜினிகாந்த்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close