’பில்லா பாண்டி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 02 May, 2018 12:12 pm


’பில்லா பாண்டி’ படத்தில் அஜித் புகழ் பாடும் பாடல் ஒன்றை, அஜித் பிறந்த நாளில் வெளியிட்டு அமர்க்களப்பத்தியுள்ளனர்.

சினிமாவில் வினியோகஸ்தராக நுழைந்து, விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து, பிறகு இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை', விஷாலின் 'மருது' போன்ற படங்களில் வில்லனாக நடித்து, இப்போது ஹீரோவாக மாறியிருக்கும் ஆர்.கே.சுரேஷ், 'பில்லா பாண்டி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன்,மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கே.சி.பிரபாத் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ராஜ் சேதுபதி இயக்குகிறார்.


’பில்லா பாண்டி' படத்தில் ஆர்.கே.சுரேஷ், அஜித் ரசிகராக வருகிறார். ஆகவே, அஜித் புகழ் பாடும் 'எங்க குல தங்கம் ..எங்க தல சிங்கம்..' என்கிற பாடல் இதில் இடம் பெறுகிறது.

இந்தப் பாடலை, அஜித்தின் பிறந்த நாளான நேற்று (மே 1 ) இசையமைப் பாளர் யுவன் சங்கர் ராஜாவை வெளியிட வைத்து, அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close