மிரட்டலுக்குப் பயப்படமாட்டேன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்!

  பால பாரதி   | Last Modified : 03 May, 2018 12:30 pm


"சர்ச்சைக்குரிய ’டிராபிக் ராமசாமி’ கதையில் நடித்தற்காக எனக்கு மிரட்டல் வந்தால், அதற்குப் பயப்படமாட்டேன். அதை தைரியமாக சந்திப்பேன்” என 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். 

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .

இந்த விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகரன்  பேசுகையில், "இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில், ’நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை’ என்று கூறி, என்னிடம் இருந்த உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டேன். ஆனால், விக்கி மட்டும் போகாமல், எனக்கு சம்பளமே வேண்டாம், உங்களோடு இருந்தால் போதும் என சொல்லி ஒட்டிக் கொண்டார்.


திடீரென ஒரு நாள், ஒரு ஸ்கிரிப்டை கொடுத்து படிக்க சொன்னார். அதுதான், டிராஃபிக் ராமசாமி என்கிற ஒன் மேன் ஆர்மியின் வாழ்க்கைக் கதை. அந்தக் கதையைப் படித்து முடித்த போது; அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவரின் வாழ்க்கை கதையைப் படித்த பிறகு பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள்! நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும்பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது  இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன்.

நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில்  இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி  இணைந்தார். கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும்  நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான்  எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர். சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இதற்காக எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. அதை சந்திக்க தயார்! ஏனென்றால், என் முதல் படம் 'சட்டம் ஒரு இருட்டறை’யிலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close