அருண் விஜய்யின் ’தடம்’ சாங் டீசர்!

  பால பாரதி   | Last Modified : 10 May, 2018 01:46 pm


அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ’தடம்’ படத்தின் ’இணையே...’ என்கிற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.  

அருண் விஜய் நடிப்பில் வந்த ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த, ‘ரெதான் தி சினிமா பீப்பள்’ நிறுவனத்தை சேர்ந்த இந்தர் குமார், தற்போது ‘தடம்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யாபிரதீப்,  மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். 


‘தடையறத் தாக்க’ திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அருண் விஜய்யும் இணைந்துள்ள தடம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தப் பட்த்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில், ‘தடம்’ திரைப் படத்தில் இடம் பெறும் ’இணையே..’ என்கிற பாடலின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close