விஜய் சேதுபதி வெளியிட்ட பாடல்

  பால பாரதி   | Last Modified : 23 Feb, 2018 01:33 pm


'பதுங்கிப் பாயணும் தல' படத்தில் வரும் 'நீ மாமனா மச்சானா..' என்கிற பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.  

'பர்மா' பட நாயகன் மைக்கேல் ஹீரோவாகவும், நைனிகா ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘பதுங்கி பாயணும் தல'. மேலும் இதில் வேலராமமூர்த்தி, சிங்கம் புலி, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.என்.ஆர்.மனோகர், ராகுல் தாத்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மீடியா பேஷன் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆமீனா ஹூசைன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி. மோசஸ் முத்துபாண்டி இயக்கியுள்ளார். ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய,வல்லவன் சந்திரசேகர் இசையமைக்க, ஞானகரவேல் மற்றும் மோசஸ் முத்துப்பாண்டி பாடல்களை எழுதியுள்ளனர். 


இந்தப் படத்தில், மோசஸ் முத்துப்பாண்டி எழுதி, அந்தோணி தாஸ் பாடிய ‘நீ மாமனா மச்சானா...’என்ற பாடலை ‘மக்கள் செல்வன்’விஜய் சேதுபதி வெளியிட்டார். பின்னர்,“இந்தப் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது.இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும்”என்று படக்குழுவினரை வாழ்த்தினார். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close