சினிமாவானது பிரபாகரன் மகன் படுகொலை சம்பவம்!

  பால பாரதி   | Last Modified : 14 Mar, 2018 10:56 am


விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை சம்பவத்தை வைத்து 'சாட்சிகள் சொர்கத்தில்' என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது.

ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் இது. அதே நேரம், போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ள 'சாட்சிகள் சொர்க்கத்தில்' படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close