ராஜா ரங்குஸ்கி' படத்தில் சிம்பு பாடிய பாடல் டீசர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 15 Mar, 2018 12:38 pm


தரணீதரன் இயக்கத்தில் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் நடிகர் சிம்பு பாடியிருக்கும், 'நான் யாருன்னு தெரியுமா..?' பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மெட்ரோ' படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் சிரிஷ். இவரின் அடுத்தபடம் 'ராஜா ரங்குஸ்கி'. இந்தப் படத்தை இயக்குநர் தரணீதரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.


இதில் நாயகியாக பூஜா தேவரியா நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். 

'ராஜா ரங்குஸ்கி' படத்துக்காக நடிகர் சிம்பு, 'நான் யாருன்னு தெரியுமா..?' என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் டீசர் தற்போது வெளிவந்திருக்கிறது.  


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close