சசிகுமாரின் 'அசுரவதம்' பட ட்ரெய்லர் வெளியானது!

  பால பாரதி   | Last Modified : 15 Mar, 2018 04:46 pm


சசிகுமார் நடித்திருக்கும்  'அசுரவதம்' படத்தின் ட்ரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டது. 

'கொடிவீரன்' படத்துக்குப் பின் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசுரவதம்'. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த நிறுவனம் அல்லாத வேறொரு பேனரில் சசிகுமார் நடித்திருக்கிறார். இப்படத்தை எம்.மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்குமுன் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தை இயக்கியவர்.


'அசுரவதம்' படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

'அசுரவதம்' படத்தின் டீசரை, சமீபத்தில் கௌதம் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு, 'அசுரவதம்' படத்தின் ட்ரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close