விஐபிகள் வெளியிட்ட 'ஆண்தேவதை' ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 15 Mar, 2018 07:22 pm


சமுத்திரக்கனி நடித்துள்ள படம் 'ஆண் தேவதை' படத்தின் ட்ரெய்லரை தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெளியிட்டனர். 

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடித்துள்ள படம் 'ஆண் தேவதை'. இதில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்திருக்கிறார். மேலும் ராதாரவி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ் பேரெடி, ஈ.ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என இரு ஜாம்பவான்களை வைத்து 'ரெட்டச்சுழி' படத்தை தந்த இயக்குநர் தாமிரா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிகரம் சினிமாஸ், சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பில் அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.


'ஆண் தேவதை' படத்தின் ட்ரெய்லர் சற்று நேரத்துக்கு முன்பு வெளியானது. இதை நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, உதயநிதி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் மற்றும் பா. ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ்,கௌதம்மேனன், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் என தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய விஐபிகள் வெளியிட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close