'மெர்குரி' பட ட்ரெய்லர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 10 Apr, 2018 11:36 am


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்திருக்கும் 'மெர்குரி' படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. 

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கப்போகிறார். 

முன்னதாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவாவை ஹீரோவாகப் போட்டு 'மெர்குரி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் இந்துஜா, ரம்யா நம்பீசன், சனத், தீபக் பரமேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளிவந்திருக்கும் நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், ஏப்ரல் 13-ம் தேதி படம் ரிலீஸ் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.  


தற்போது, தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடைபெறுவதால் தமிழ்ப் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் உள்ளது. ஆனால், இந்தப் படம் எந்த மொழியையும் வைத்து எடுக்காமல் சைலன்ட் மூவியாக எடுத்திருப்பதால், 'மெர்குரி' படத்தை திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யும் பிளானில் இருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால்,இதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு தமிழில் ரிலீஸ் செய்யாமல், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close