‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 10 Apr, 2018 02:58 pm


புதிய முயற்சியாக எடுக்கப்பட்ட ‘எ ஸ்டோரி’ என்கிற வெப் சீரிஸ் தொடரின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன. 

இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதால் வெப் சீரிஸ் படங்கள் நிறைய உருவாக தொடங்கியுள்ளது.இதில் நடிப்பதற்கு பிரபல நட்சத்திரங்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.பிரபல நடிகர் பாபி சிம்ஹா ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். 

அந்தவகையில், ‘எ ஸ்டோரி’(A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ள நிமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா நடித்துள்ளார். இதற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த 'கதம் கதம்' மற்றும் 'இட்லி' ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’  மற்றும்  'தைரியமான ... சொல்லப்படாத கதை' என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், சமீபத்தில்வெளியான ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close