ஜிவி பிரகாஷ் பட ட்ரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

  பால பாரதி   | Last Modified : 14 May, 2018 04:19 pm


ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ’செம‘ படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்.

’செம’, ’அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ’ஐங்கரன்’, ’சர்வம் தாள மயம்’, ’100% காதல்’, ’கோபம்’, ’ரெட்டை கொம்பு’, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம், ஏ.எல்.விஜய் படம் என ஜி.வி.பிரகாஷிற்கு அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. 

இதில், இயக்குர்நர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செம’படம் செமயாக வந்திருக்கிறதாம்! இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’மூலம் தயாரித்துள்ளார். 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை வருகிற மே 25-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ’செம’படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close