சிவகார்த்திகேயன் வெளியிட்ட’செம’ பட ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 14 May, 2018 05:31 pm


ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’செம‘ படத்தின் ட்ரெய்லரை சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இசையமைப்பாளராக இருந்து இப்போது முன்னணி ஹீரோவாக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் வசம் ஒரு டஜன் படங்கள் உள்ளது.

இதில், இயக்குர்நர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள ’செம’ படமும் அடங்கும். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.இந்தப் படம் மே 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மர்றும் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில்,’செம’படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close