விவேக்கிற்கு கை கொடுக்கும் 3 முக்கிய ஹீரோக்கள்!

  பால பாரதி   | Last Modified : 19 May, 2018 11:50 am


காமெடி நடிகர் விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘எழுமின்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர். 

தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகர்களின் பெயர்களைப் பட்டையல் போட்டால், அதில் விவேக்கின் பெயர் இல்லாமல் அந்தப் பட்டியல் நிறைவடையாது! அந்தளவுக்கு மக்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்திருக்கிறார் விவேக். அவர், காமெடியில் மட்டுமல்லாமல் குணசித்திர நடிப்பிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார். இது தவிர, ’நான் தான் பாலா’,’மகனே என் மருமகனே’போன்ற வெகு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘எழுமின்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் விவேக். வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை வி.பி.விஜி இயக்கியிருக்கிறார்.தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிப் பேசும் இந்தப் படத்தில் விவேக் ஜோடியாக தேவயானி நடித்திருக்கிறார். 

மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

’எழுமின்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. இந்த ட்ரெய்லரை நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close