’கால கூத்து’ படத்தின் சினிக் பீக்!

  பால பாரதி   | Last Modified : 21 May, 2018 10:59 am

 

பிரசன்னா - கலையரசன் நடித்திருக்கும் ’கால கூத்து’ படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ’சினிக் பீக்’கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

’நடிச்சா ஹீரோ சார்..!’ எண்கிற பிடிவாதமெல்லாம் பிரசன்னாவிடம் துளியும் கிடையாது! பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், ’அஞ்சாதே’ மாதிரி வெகு சில படங்களில் வில்லனாகவும் வந்து வெளுத்து வாங்கியிருக்கிறார் பிரசன்னா. 

திருமணத்துக்குப் பிறகு சினிமா, விளம்பரப் படங்கள் என பிஸியாக இருக்கும் பிரசன்னா, ’மெட்ராஸ்’ பட நாயகன் கலையரசன் உடன் சேர்ந்து ’கால கூத்து’ என்கிற படத்தில் டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடித்திருக்கிறார். இதில் சிருஷ்டி டாங்கே - தன்ஷிகா இருவரும் நாயகிகாளாக நடித்திருக்கின்றனர். 


நட்பு மற்றும் காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ’கால கூத்து’படத்தை அறிமுக இயக்குநர் எம்.நாகராஜன் இயக்கியிருக்கிறார். கள்ளழகர் எண்டர் டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார்.  

’கால கூத்து’ திரைப்படம் வரும் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்லது. இந்நிலையில், ’கால கூத்து’ படக்குழுவினர், இந்தப் படத்தின் ’சினிக் பீக்’கை வெளியிட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close